பேகம் என்ற பாலியல் தொழிலாளி பிச்சைகாரனை காதலித்து திருமணம்..

211

 

அன்றைய காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை பெண்களை இழிவு செய்வது குறையவில்லை. எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லை. அவ்வாறு பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் சித்ரவதைதான்.

யாருமே தவறான வழிகளில் வேண்டும் என்றே செல்வதில்லை. அவரது வாழ்க்கை சூழல், குடும்ப நெருக்கடி, வேறு வழியின்மை, பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவர்களை தள்ளுகின்றன.

ஆசைப்பட்டு ஒன்றும் அந்த தொழிலில் யாரும் இருந்துவிடுவதில்லை, என்றாவது ஒருநாள் நாம் இந்த தொழிலில் இருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையில் தான் பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள்.

அப்படி, ஒரு நம்பிக்கையில் இருந்த பெண் தான் பேகம் என்ற பாலியல் தொழிலாளி. இவரின் வாழ்க்கையில் நடந்த உருக்கமான தருணத்தின் கதை இதோ.

என் பெற்றோர்கள் யார், நான் எப்போது பிறந்தேன் என்று எதுவுமே எனக்கு தெரியாது. தெருக்களின் ஓரம் தான் என் வாழ்க்கையை கழித்தேன். சாலையில் தங்கிய போது பல ஆண்கள் என்னிடம் தவறாக நெருங்குவார்கள் அவர்களிடம் இருந்து போராடி என்னை காப்பாற்றி கொண்டுள்ளேன்

ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன், அந்த தொழிலில் இருந்து வெளியே வந்தால் யாரும் எனக்கு உதவி செய்யமாட்டார்கள் என எனக்கு தெரியும். இருந்தபோதிலும் ஒரு நாள் மாலைப்பொழுதில் அங்கிருந்து வெளியேறினேன்.

அப்போது நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது, மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கினேன்.அந்த மரத்தின் மற்றொரு பக்கத்தில் பிச்சைக்காரர் ஒருவர் தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அவரை நான் கவனிக்கவில்லை. மழை சற்று நிற்பது போல இருந்தது, மழை நின்ற பின்னர் நாம் எங்கு செல்வது என்று நினைக்கையில் எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

அப்போது, அந்த பிச்சைகாரர் தனது நாற்காலியை சத்தமாக இயக்கினார், அந்த சத்தம் கேட்டு அவரை நான் திரும்பிபார்த்தேன், அவரும் அழுதுகொண்டிருந்த என்னை பார்த்தார்.

அவர் என்னை பார்த்த போது என்னிடம் பணம் இல்லை என கூறினேன், உடனே அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை எடுத்து எனது கையில் கொடுத்து விட்டு, இடி பயங்கரமாக இருக்கிறது, பாதுகாப்பாக இரு என்று சொல்லிவிட்டு தூரல் மழையில் மெதுவாக சென்றார்.

முதல் முறையாக ஒரு ஆண் மகன் என்னிடம் எதுவும் எதிர்பாராமல் எனக்கு பணம் கொடுத்து சென்ற தருணம் அது. அக்கணமே அந்த பிச்சைகாரரின் மேல் எனக்குள் ஒருவித மதிப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர், சில நாட்கள் கழித்து அந்த பிச்சைகாரர் அதே மரத்தடியில் இருப்பதை பார்த்தேன், அப்போது அவரிடம் சென்றுபேசிய போது அவர் தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறினார்.

நான் ஊனமுற்றவன் என்பதால் எனது மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். வயிற்றுபிழைப்புக்காக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் என கூறினார்.

அவரின் கதையை கேட்ட எனக்கு வேதனையாக இருந்தது, அவர் மீது இருந்த மரியாதை காதலாக மாறியது. நான் உங்களை காதலிக்கிறேன், உங்களுடைய நாற்காலியை வாழ்நாள் முழுவதும் தள்ளுவதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தேன், அதை கேட்ட அவர் சிரித்தார்.

எங்கள் இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆகிவிட்டது, ஒருவேளை சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. அப்படி உணவு கிடைத்தால் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம்.

பழைய நாட்களை மறந்து இனிமையாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.