செல்வம் கொழிக்க வேண்டுமா? வீட்டில் மீன் தொட்டியை வையுங்கள்

111

வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி அதை சரியான இடத்தில் வைத்தால் நல்லது நடக்கும். இதே தவறான இடத்தில் வைத்தால் எதிர்மறையான விடயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

  • சமையலறை மற்றும் படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் பண இழப்பு ஏற்படும்.
  • வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மீன் தொட்டியை வைத்தால் குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.
  • மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் நிச்சயம் இருக்க வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • மீன் தொட்டிகளில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
  • மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும்.
  • வீட்டுக்குள் நுழையும் போது மீன் தொட்டி இடது பக்கத்தில் இருக்க வேண்டும்.
  • மீன் தொட்டியில் உள்ள மீன் உயிரிழந்தால் அதை நீக்கி விட்டு அதே நிறத்தில் வேறு மீனை வாங்கி தொட்டியில் போட வேண்டும்.
  • ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் மீன்களை தொட்டியில் வளர்த்தால் வீட்டினுள் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அது அதிகரிக்கும்.