தென்னிந்திய நடிகைகளில் சைட் பிஸ்னஸ் என்ன தெரியுமா?

348

நடிகர் அளவிற்கு நடிகைகளிலும் இந்த காலத்தில் சம்பளம் வாங்குவது நிதர்சனமான உண்மை. ஆனால் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து அவர்கள் சைடு பிசினஸ் செய்துவருகின்றனர்.

இதில், பலரும் ரியல் எஸ்டேட் தொழிலில் தான் நிறைய முதலீடு செய்துள்ளனர். நயன்தார, த்ரிஷா, நமீதா, காஜல், அனுஷ்கா என முன்னணியில் இருப்பாவர்களில் இருந்து பின்னணியில் இருப்பவர்கள் வரை அனைவரும் சைடு பிசினஸ் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

நயன்தாரா

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன் ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய முதலீடு செய்துள்ளார். சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் போன்ற இடங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி கட்டிடங்கள் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் பிறந்த மாநிலத்தில் ஓர் பெரிய பண்ணை வீடு வாங்கியதாக கோலிவுட் கிசுகிசுக்கிறது.

த்ரிஷா

நயனை போலவே த்ரிஷாவும் ரியல் எஸ்டேட்டில் தான், நடித்து சம்பாதித்த பல கோடிகளை முதலீடு செய்துள்ளார்.

 

தமன்னா

தங்கம் போல மின்னும் தமன்னா, தங்க வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். புதிய ரக நகைகளை டிசைன் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறாராம் தமன்னா.

அனுஷ்கா

தென்னிந்தியாவில் நயனுக்கு அடுத்து அதிக ஊதியம் பெறும் நடிகை அனுஷ்கா. இவர் தான் சம்பாதித்ததில் பெரும் பகுதியை பெங்களூருவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வைத்துள்ளார்.

ஹன்சிகா

மெய்யாலுமே ஹன்சிக்காவிற்கு நல்ல உள்ளம் தான். தான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் ஓர் இடம் வாங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.

சமந்தா

சமந்தா சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம்.

காஜல் அகர்வால்

பெரும்பாலான முன்னணி நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் தான் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதற்கு காஜலும் விதிவிலக்கு அல்ல

டாப்சி

டாப்சி சற்று வினோதமாக யோசித்து சைடு பிசினஸ் செய்து வருகிறார். கல்யாண வேலைகள் சார்ந்த தொழில் அது. மணப்பெண், மணமகனை அழைத்துக் கொண்டு போனால் மட்டும் போதும், அலங்காரம், மண்டபம், உணவு, என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரும் பிசினஸ் செய்து வருகிறார் டாப்சி.