பெங்களூரில் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

158

பெங்களூர்: நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரில் அர்ஜுன் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். 354ஏ, 506, 509, 354 ஆகிய பிரிவுகளில் நடிகர் அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஸ்மயா எனும் திரைப்படத்தில் நடித்தபோது தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.