விஜய் ரசிகர்களின் செயல்: அரசின் இலவச பொருட்களை உடைக்கும் வீடியோ

172

தமிழக அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை, விஜய் ரசிகர்கள் உடைப்பது, தீயிட்டு கொளுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திரைப்பட நடிகரான விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் இருக்கும் சில காட்சிகள் மக்கள் மனதில் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழகத்தின் உண்மை நிலையை படம் விளக்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவினர் இப்படத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போன்று உள்ளது.

இதனால் படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு சென்று அங்கிருக்கும் பேனர்களை கிழித்தனர்.

இதையடுத்து நேற்று மீண்டும் தணிக்கை குழுக்கு சர்கார் படம் சென்றது. அதன் பின் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சில பெயர்களுக்கு MUTE போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுகவினர் மீது விஜய் ரசிகர்கள் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நிலையில், தற்போது படத்தில் இருக்கும் காட்சிகள் நீக்கப்படுவதற்கும் அதிமுகவினர் தான் காரணம் என்று மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் அரசு இலவசமாக கொடுத்த மிக்சி, டிவி மற்றும் லேப்டாப் போன்று பொருட்களை உடைப்பதும், தீயிட்டு கொளுத்தியும் வருகின்றனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.