ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

63

மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த நிலையில் இருப்பது தொடர்பான தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிவி நடிகராக புகழ்பெற்று வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2013ஆம் ஆண்டு அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான கை போச்சே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

பி.கே, ராப்டா, கேதார்நாத், சோன்சிரியா, ட்ரைவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானார்.

சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் பெண் மேலாளரான திஷா சேலியன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த திங்களன்று தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் பாலிவுட்டில் பூதாகரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.