ஆராய்ச்சிகள் என்கிற பெயரில் தமிழர் பிரதேசங்களில் அத்துமீறிச் செயற்படும் தொல்லியல் திணைக்களம் – குருந்தூர் மலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் நேரடியாக விஜயம்

59

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய நடவடிக்கைகளாலும், பொலிசாரின் அடக்குமுறைகளாலும் திட்டமிட்டு அபகரிக்கப்படும் தமிழர் பிரதேசம் – குமுழமுனை குருந்தூர் மலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் அவர்கள் நேற்றையதினம் (19.01.2021) நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

எனினும் தான் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று தெரிவித்திருந்தும் மலைக்கு செல்ல அங்கிருந்த இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதுடன் நீர்வளம் மிக்க அந்தப் பகுதியை முற்றாக தமிழர்களிடமிருந்து அபகரிக்கும் நோக்கில் தான் இவ் திட்டமிட்ட செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,