ஐ.நாவின் எந்தத் தீர்மானத்தையும் வெற்றிகொள்ள அரசாங்கம் தயார்

57

புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கின் கீழ் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எந்தவொரு தீர்மானங்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ள தாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான போராட்டம் ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே தவிர, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஆதாரங்களற்ற பொய்யான  பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது. தமிழ் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்களென வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை.

அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இன நல்லிணக்கம் என்று செய்த தவறுகளை திருத்தும் போது அதனை இன புறக்கணிப்பு என்று கருதுவது தவறான நிலைப்பாடாகும்.

30 வருட கால சிவில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தியது. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்காலக் கட்டத்தில் உள்ளக பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.