நாடு முழுவதும் 120 பாடசாலைகளில் ஆரோக்கியமான சுகாதார அறைகள்

28
மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 120 பாடசாலைகளுக்கு உதவும் அமெரிக்கா வலய மற்றும் மாகாண கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுவதற்கான முன்னெடுப்பொன்றை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

கொவிட்-19 க்கு எதிரான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான கல்வி அமைச்சின் பரிந்துரைகளை இந்த சுகாதார அறைகள் ஊக்குவிப்பதுடன், படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள் மற்றும் நீர் விநியோப்பான்கள் ஆகியவற்றை இவை கொண்டிருக்கும். தேவைப்படும் பட்சத்தில் இந்த அறைகள் மாணவர்களுக்கான தனிமை மற்றும் தொடர்புடைய கவனிப்பையும் வழங்கும்.