திருகோணமலையில் அபிஷா தனியார் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

41

நேற்றைய தினம் (09.03.2021) இல 208, லோவர் வீதி, உவர் மலை, திருகோணமலையில் அமைந்துள்ள அபிஷா தனியார் வைத்தியசாலையில், வைத்திய கலாநிதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிவமோகன் அவர்களின் தலைமையில், விசன் கெயாரின் (VISION CARE) பங்களிப்புடன் இலவச மருத்துவ முகாம் நிகழ்வுகள் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 3.00 மணிவரை நடைபெற்றது.

இவ் இலவச மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, காது பரிசோதனை மற்றும் பொதுவான மருத்துவ பரிசோதனைகளும் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.