ஹரி, மேகன் கருத்து: மகாராணி வருத்தம்

8

தம்பதியின் மகன் ஆர்ச்சியின் தோல் நிறம் குறித்துக் கூறப்பட்ட கருத்து, தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படும் என அரசியார் உறுதி அளித்தார்.

தொலைக்காட்சிப் பிரபலம் ஓப்ரா வின்ப்ரி இளவரசர் ஹரியையும் மேகனையும் கண்ட நேர்காணல், அரச குடும்பத்தைப் பெரிய சிக்கலில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆர்ச்சியின் தோல் நிறம், எவ்வளவு கறுமையாக இருக்கக்கூடும் என்பதில் அரச குடும்பத்தார் அதிக அக்கறை தெரிவித்ததோடு, தமக்குத் தற்கொலை எண்ணம் தோன்றி உதவி கேட்டபோது அது புறக்கணிக்கப்பட்டதாகவும், மேகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், அவற்றைத் தீவிரமான ஒன்றாய்க் கருதுவதாக அரசியார் சார்பாக வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இளவரசர் ஹரி, மேகன், ஆர்ச்சி மூவருமே எப்போதுமே அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்கள்தாம் என்றும் அறிக்கை தெரிவித்தது.