காத்திருக்கும் அமாஷா டி சில்வா

64

ஒலிம்பிக் பயணம்

1999ம் ஆண்டு கண்டியில பிறந்த அமாஷா த சில்வா கண்டி சுவர்ணமாலி மகளிர் வித்தியாலத்திலிருந்து விளையாட்டுலகிற்கு வந்த குறுந்தூர ஓட்ட விராங்கனையாவார். இவர் குறுந்தூர ஓட்டத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளதுடன் 100, 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் சிறந்த நேரத்தைப் பதிவு செய்துள்ள அவர் எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆவலுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை தான் கடந்து வந்த பாதையைப் பற்றி அமாஷா டி சில்வா கூறும் போது: “நான் தற்போதுள்ள நிலைக்கு எனது பெற்றோரின் முயற்சியும், ஒத்துழைப்புமே காரணமாகும். அதனால் இங்கு எனது முதல் நன்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் அதே போல் எனது பயிற்சியாளர் ஜே. எஸ். வீரக்கொடியையும் இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அதேபோல் இலங்கை இராணுவப்படையினரால் கிடைக்கும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் ரிஸ்பரி நிறுவனத்தினால் எமது விளையாட்டுக்கு கிடைக்கும் ஒத்துழைப்பு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது” என்று அமாஷா தெரிவித்துள்ளார்.