உய்குர் விவகாரம்: மேற்கு நாடுகள் சீனா மீது தடை

94

வட மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் உய்குர் மக்களை சீனா முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் நிலையில் அங்கு துன்புறுத்தல், கட்டாய தொழில் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடாவின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் 30 ஆண்டுகளுக்குப் பின், மனித உரிமை மீறல்களுக்காக சீனா மீது நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக இந்த முகாம் பயன்படுத்தப்படுவதாகவும் அங்கு மறு கல்வி புகட்டப்படுவதாகவும் கூறுகிறது.