ஜப்னா கரப்பந்தாட்ட லீக் தொடர் கோலாகலமாக ஆரம்பம்

92

மங்கள விளக்கேற்றல்

முதலில் மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து, தேசியகொடி மற்றும் விளையாட்டு கழகங்களின் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன.

சத்திய பிரமாணம்

போட்டி நடுவர், வீரர்கள் சார்பாக சத்தியபிரமண நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

சிறப்பு நிகழ்வு

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஒரு நாளில் மொத்தமாக 4 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், லீக் போட்டிகள் ஏப்ரல் 11ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றன. லீக் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், குவாலிபையர், எளிமினேட்டர் போட்டிகள் ஏப்ரல் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்படும் என்பதுடன், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில்தோல்வியடைந்த அணியுடன் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும். எலிமினேட்டர் போட்டி ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறும் என்பதுடன், தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் 24ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறும். குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிகள் புத்தூர் ஆவரங்கால் மைதானத்தில் நடைபெவுள்ளன.

அதேவேளை ஏனைய போட்டிகள், ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக மைதானம், கரைநகர் கலைநிதி விளையாட்டு கழகம், மாவடி இந்து இளையோர் விளையாட்டு கழகம், சண்டிலிப்பாய் இந்து இளையோர் விளையாட்டு கழகம், நீர்வேலி காமாட்சியம்பாள் விளையாட்டு கழகம், மட்டுவில் மோஹனதாஸ் விளையாட்டு கழகம், ஆவரங்கால் இந்து இளையோர் விளையாட்டு கழகம் மற்றும் வல்வெட்டித்துறை விளையாட்டு மைதானங்கள் என்பவற்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.