லக்மால் 5 விக்கெட்டை வீழ்த்தியும் முன்னேறிய மேற்கிந்திய தீவுகள்

61

நோர்த் சௌண்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில், மே.தீவுகள் அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றிருந்தது. விக்கெட்டிழப்பின்றி 2ம் நாளில் களமிறங்கிய மே.தீவுகள் அணிக்கு, இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சவால் அளித்தனர். குறிப்பாக சுரங்க லக்மால் அனுபவ பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்து, தன்னுடைய டெஸ்ட் 5 விக்கெட் பிரதியொன்றை 2ம் நாளில் பதிவு செய்தார்.

தங்களுடைய துடுப்பாட்டத்தை சிறப்பாக கையாண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டபோதும், ஓட்டங்களை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டிருந்தது.

அணித்தலைவர் க்ரைக் ப்ராத்வைட் 2ம் நாளில் எந்தவொரு ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழக்க, ஜோன் கெம்பல் 42 ஓட்டங்களையும், க்ரூமா பொனர் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்தனர்.

இவருடன் 2ம் நாளில் களத்தில் இருந்த கெமார் ரோச் ஆட்டமிழக்காமல் 4 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மே.தீவுகள் அணியானது 2ம் நாள் ஆட்டநேர நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அத்துடன், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 99 ஓட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.