புதுக்குடியிருப்பில் 19 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

99

புதுக்குடியிருப்பு, விசுவமடு பாரதி மகாவித்தியாலயத்திற்கு கல்வி நிமித்தம் சென்ற 24 மாணவர்கள் வெள்ளி (16) குளவி கொட்டுக்கு இலக்காகி மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், பின்பு அவர்களில் 8 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 5 மாணவர்களும் 19 மாணவிகளும் உள்ளடங்குவதாகவும், இந்த கிராமத்தில் இணையவழி கல்வியை கற்பதற்கு தொலைத்தொடர்பு சிக்னல் இல்லாதது காரணமாக இருக்கின்றது. தற்போது மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் இருந்து 16 மாணவர்களும் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.