உடனடியாக நாட்டை மூடுங்கள் – ஜனாதிபதிக்கு பொன்சேகா கடிதம்!

76

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முகநூலில் கடிதமொன்றைப் பதிவிட்டுள்ளார், அதில் அவர், கொரோனா தொற்றினால் அப்பாவி மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு நாட்டை முழுமையாக மூடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் pfizer, moderna போன்ற பலமான தடுப்பூசிகளின் இரண்டாம்கட்ட தொகையை நாட்டு மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.