கேரளா பக்கம் ஒளிந்திருந்த நிலையில் நடிகை மீரா மிதுனை அலேக்காக தூக்கிய பொலிசார்

20

மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில்  அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். இவர் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளி யிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

இதுதொடர்பாக மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவில்,

தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன் என்று குறிப்பிட்டார்.