வவுனியாவில் பலர் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாத துர்பாக்கிய நிலை !

36

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் செல்வாக்கால் வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாத நிலையில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 பேர் வரையில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் சிலர் சுகாதார திணைக்களத்துடன் தொடர்புடைய விடுதிகளில் தங்கியுள்ளவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பிரபல ஹோட்டல் உரிமையாளர் எனப் பலர் உள்ளனர்.

குறித்த நபர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்த போதும், சிலர் தாம் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மாவட்டமட்ட உயர் அதிகாரியும் அதற்கு உடந்தையாக செயற்படுவதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.